Tuesday, August 6, 2019

மூன்று குழுக்கள் ஒரே நேரத்தில் விசாரணை! - முறைகேடு புகாரில் சிக்கிய காமராசர் பல்கலைக்கழகம்

செ.சல்மான் பாரிஸ்

வி.சதிஷ்குமார்

இரண்டு வகையான மோசடிப் புகார் பற்றி, இரண்டு குழுக்களும், காமராசர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் கடந்த சில நாள்களாக விசாரித்து வரும் நிலையில், தற்போது ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



மதுரை காமராசர் பல்கலைகழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடுகளை ஒரே நேரத்தில் மூன்று வகையான விசாரணைக் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



செல்லத்துரைவி.சதீஷ்குமார்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் பரபரப்புக்கும் இடைவெளியே இல்லாத வகையில் கடந்த சில வருடங்களாக சர்ச்சையை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகப் பொறுப்பேற்றது முதல், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம், துணைவேந்தர் செல்லத்துரை தகுதி நீக்கம் செய்யப்பட்டது என்று தொடர்ந்து தற்போது தொலைதூரக் கல்வியில் முறைகேடு என்று இன்றுவரை பரபரப்பு தொடர்கிறது.

செல்லத்துரை துணைவேந்தராக இருந்தபோது பேராசிரியர்கள் அலுவலர்கள் உட்பட 69 பேர் பணி நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறைக்கு உத்தரவிட முன்னாள் நீதிபதி அக்பர்அலி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.



செல்லத்துரைவி.சதீஷ்குமார்

இதே குழுவே தொலைதூரக் கல்வித்துறையில் பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் கொடுத்ததாக எழும்பியுள்ள மோசடிப் புகாரையும் உயர் நீதிமன்ற உத்தரவால் விசாரித்து வருகிறது. இரண்டு வகையான மோசடிப் புகார் பற்றி, இந்த இரண்டு குழுக்களும், பல்கலைக்கழகத்தில் பல்வேறு தரப்பினரிடம் கடந்த சில நாள்களாக விசாரித்து வரும் நிலையில், தொலைதூரக் கல்வித்துறையில் நடந்துள்ள மோசடியை வழக்காகப் பதிவு செய்துள்ள ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளும் இன்று விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்ற விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024