Thursday, August 22, 2019

Court News

`இந்த வழக்குகளை இனி வைத்தியநாதன் விசாரிக்கக் கூடாது’ - 64 பெண் வழக்கறிஞர்கள் போர்க்கொடி!

கலிலுல்லா.ச

பெண்கள் மற்றும் கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிடக் கூடாது எனத் தலைமை நீதிபதியிடம் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் 64 பேர் மனு அளித்தனர்.

சமீபத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் தொடர்ந்த வழக்கை விசாரித்தார் நீதிபதி வைத்தியநாதன். அப்போது, `கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகப் பெற்றோர்கள் கருதுகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார். மேலும், `பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும்’ கருத்து தெரிவித்தார்.

petition
நீதிபதி வைத்தியநாதனின் இந்தக் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. `இனி பெண்கள் மற்றும் கிறிஸ்துவக் கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிடக் கூடாது’ என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் 64 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளனர். அதில், `2014-ம் ஆண்டு மோசடி குற்றங்களில் ஈடுபடுவோரின் விரல்களை வெட்ட வேண்டும். 2015-ம் ஆண்டு கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்தது என வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளைத் தெரிவிப்பது நீதிபதி வைத்தியநாதனுக்கு புதிதல்ல’ எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`வழக்குக்கு சம்பந்தமில்லாமலும் புள்ளிவிவர ஆதாரங்கள் இல்லாமலும் நீதிபதியின் இது போன்ற கருத்துகள் சமுதாயத்தில் மத ரீதியான வெறுப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்ல, நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் உறுதியாகிறது. கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்த கருத்து, கிறிஸ்துவர்கள் மீதான அவருடைய தனிப்பட்ட வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

petition

தங்களுடைய சொந்த கருத்துகளை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களை நீதிபதிகள் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதே போன்று வழக்குக்குச் சம்பந்தமில்லாத கருத்துகளைத் தெரிவிக்கிறார்’ எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...