150 ஜூனியர்களுக்கு மொட்டை... சீனியர்களுக்கு சல்யூட்! - உ.பி பல்கலைக்கழகத்தில் நடந்த ராகிங் கொடுமை
கலிலுல்லா.ச
மருத்துவக் கனவுகளுடன் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த மாணவர்களுக்கு இப்படியொரு அதிர்ச்சி காத்திருக்கும் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
junior students ( ANI )
ராகிங் கொடுமைகள் ஒருபுறம் ஓய்ந்திருந்தாலும், வடமாநிலங்களில் இன்றளவும் ராகிங் நடந்துவருவதாகப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ராகிங் கொடுமைகளால் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவதும் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்த காரணத்தால், ராகிங் செய்வது குற்றச்செயலாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கோ ஒரு சில கல்லூரிகளில் இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
medical students
ANI
இதில், உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுதான் கொடுமையின் உச்சம். அங்குள்ள எடவா மாவட்டத்தில் உள்ள `உத்தரப்பிரதேஷ் யுனிவர்சிட்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ்’ என்ற அரசு கல்வி நிறுவனத்தில் மருத்துவக் கனவுகளுடன் நுழைந்த முதலாமாண்டு மாணவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு படித்துகொண்டிருந்த சீனியர்கள் சேர்ந்து, முதலாமாண்டு மாணவர்கள் 150 பேரை மொட்டையடிக்கச் சொல்லி வற்புறுத்தி, அவர்கள் தலையில் குடுமி வைத்து, தங்களுக்கு சல்யூட் வைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் 150 மாணவர்களும் மொட்டையடித்தபடி, பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு நடந்துசெல்கின்றனர். மேலும் சீனியர்களுக்கு சல்யூட் அடித்தபடியே கடந்து செல்கின்றனர். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்குமார் பேசுகையில், ``ராகிங் போன்ற செயல்பாடுகளிலிருந்து மாணவர்களைக் காக்க நாங்கள் எச்சரிக்கையாக இருப்போம். மேலும் ராகிங் செயல்பாடுகளுக்கு எதிரான கமிட்டி ஒன்றை அமைத்து புகார்களைப் பெற ஏற்பாடு செய்துள்ளோம்.
university
ANI
ANI
அதுமட்டுமன்றி ஸ்பெஷல் ஸ்குவாடு ஒன்றையும் அமைத்துள்ளோம். அவர்கள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ராகிங் குறித்து ஆய்வு செய்கின்றனர். மாணவர்கள் ஆன்டி-ராகிங் கமிட்டியிலும் அவர்கள் விடுதி வார்டனிடமும் புகார் அளிக்கலாம். கண்டிப்பாக இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சில மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளோம். ஆகவே ஜூனியர் மாணவர்கள் எந்தவித கவலையும்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment