Tuesday, September 10, 2019

துணை மருத்துவம் இன்று கவுன்சிலிங்

Added : செப் 09, 2019 23:44


சென்னை:பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான, கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., உள்ளிட்ட, 17 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கு, 23 ஆயிரத்து, 778 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், 22 ஆயிரத்து, 155 பேர், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்.இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று துவங்குகிறது; 25ம் தேதி வரை நடக்கிறது. வரும் 11, 14, 15, 22 ஆகிய, நான்கு நாட்கள் விடுமுறை.மொத்தம், 15 ஆயிரத்து, 538 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024