தற்கொலைக்கு முக்கிய காரணம் அனைவரது கைகளில் இருக்கும் செல்போன்: அரசு மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் எச்சரிக்கை
சென்னை
தற்கொலைக்கு முக்கிய காரண மாக அனைவரது கைகளில் இருக் கும் செல்போன் உள்ளது என்று ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை ஆர்எம்ஓ மற்றும் மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாக்டர்கள் பணிச் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை
செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில்
டாக்டர்களிடம் தற்கொலை எண்ணத்தைப் போக்க, தற்கொலை தடுப்பு குறித்த
விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்
நேற்று நடை பெற்றது.
மருத்துவமனை கண்காணிப் பாளர் மணி தலைமை தாங்கினார். மருத்துவத் துறை பேராசிரியர் பரந்தாமன் வரவேற்புரை ஆற்றி னார். மருத்துவ இளநிலை, முது நிலை படிக்கும் மாணவ மாணவி யர், பயிற்சி டாக்டர்கள், டாக்டர் கள், பேராசிரியர்கள், உதவி பேரா சிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தற்கொலைக்கு முக்கிய காரண மாக அனைவரது கைகளில் இருக் கும் செல்போன் உள்ளது என்று ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை ஆர்எம்ஓ மற்றும் மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.
மருத்துவமனை கண்காணிப் பாளர் மணி தலைமை தாங்கினார். மருத்துவத் துறை பேராசிரியர் பரந்தாமன் வரவேற்புரை ஆற்றி னார். மருத்துவ இளநிலை, முது நிலை படிக்கும் மாணவ மாணவி யர், பயிற்சி டாக்டர்கள், டாக்டர் கள், பேராசிரியர்கள், உதவி பேரா சிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தற்கொலை தடுப்பு குறித்து மருத்துவமனை ஆர்எம்ஓ மற்றும் மனநல டாக்டர் ஆனந்த் பிரதாப் பேசியதாவது:
உலக அளவில் தினமும் 1 லட்சம் பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பொதுவாக பணிச் சுமை, வேலை கிடைக்காதது, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, சூழ்நிலை, மனநோய், கடன் தொல்லை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிரச்சினை போன்ற வற்றால் தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர்.
முக்கியமாக நடிகர், நடிகை கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்கொலை, மற்ற வர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது. இதற்கு முக்கிய காரணமாக செல்போன் உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது.
பிரபலங்களின் தற்கொலை குறித்த செய்தி மற்றும் புகைப் படங்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவுவதற்கு செல்போன்தான் காரணம். இதன் மூலம் சிறிய பிரச்சினை என்றாலும், அந்த பிரபலமே தற்கொலை செய்து கொள்கிறார். நாம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறது.
தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிர் பிழைத்தால், அவர் குற்ற உணர்ச்சியில்
இருப்பார். வெளிநாடு களில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது கொள்வது
அதிகமாக நடக்கிறது. ஆனால், நமது நாட்டில் பூச்சி மருந்து குடிப்பது, தூக்கு
போடுவது, தூக்க மாத்திரை சாப்பிடுவது, கிணறு, ஆறு, கடல் மற்றும் பெரிய
கட்டிடத்தில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின் றனர்.உலக அளவில் தினமும் 1 லட்சம் பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பொதுவாக பணிச் சுமை, வேலை கிடைக்காதது, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, சூழ்நிலை, மனநோய், கடன் தொல்லை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிரச்சினை போன்ற வற்றால் தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர்.
முக்கியமாக நடிகர், நடிகை கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்கொலை, மற்ற வர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது. இதற்கு முக்கிய காரணமாக செல்போன் உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது.
பிரபலங்களின் தற்கொலை குறித்த செய்தி மற்றும் புகைப் படங்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவுவதற்கு செல்போன்தான் காரணம். இதன் மூலம் சிறிய பிரச்சினை என்றாலும், அந்த பிரபலமே தற்கொலை செய்து கொள்கிறார். நாம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறது.
இதில், பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து ஆண்கள்தான் அதிக அளவில் குதிக்கின்றனர். தற்கொலையைத் தடுக்க மன நல ஆலோசனைகள், மனநல மருத் துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை கள் உள்ளன. ஆனால், பலர் சிகிச்சையை, தொடர்ந்து எடுத் துக் கொள்வதில்லை. மருத் துவம் என்பது பணி இல்லை. இது ஒரு சேவை. டாக்டர்கள், பணியை சுமையாக நினைக்காமல், சேவை யாக கருதினால் தற்கொலை எண்ணம் வரவே வராது. கூடுதல் பணியாக இருந்தால், புதிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக நினைத்து சந்தோஷமாக செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.
நிறைவாக மருத்துவத் துறை உதவி பேராசிரியர் உஷா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment