Sunday, September 29, 2019

என்.டி.ஏ.வுக்கு கடிதம் விபரம் கேட்கிறது சி.பி.சி.ஐ.டி.

Added : செப் 28, 2019 23:38

தேனி, :தமிழகத்தில் இருந்து ஒரே பெயர், முகவரியில் 'நீட்' தேர்வு எழுதியோர் விபரத்தை கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.) சி.பி.சி.ஐ.டி. கடிதம் அனுப்பியுள்ளது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்ட அறிக்கை:'நீட் ' ஆள்மாறாட்ட வழக்கின் முதல்கட்ட விசாரணையில் உதித்சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த பிரவின், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற கல்லுாரியில் மோசடியாக 'சீட்' பெற்றதாக கூறப்படும் ராகுல், அபிராமி, பெற்றோரிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து 'நீட்' பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து தேர்வு பெற்றவர்களின் விபரம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரம் கேட்டு 'நீட்' தேர்வை நடத்தும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024