Sunday, September 29, 2019

பாகுபாடில்லாத சமூகத்தை உருவாக்கும் கல்வி முறை பட்டமளிப்பு விழாவில் ஓய்வு நீதிபதி பேச்சு

Added : செப் 29, 2019 00:42

மதுரை:"பாகுபாடில்லாத சமூகத்தை உருவாக்கும் கல்வி முறையே சிறந்தது'' என உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி கோகலே தெரிவித்தார்.மதுரை காமராஜ் பல்கலையின் 53வது பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடந்தது.கோகலே பட்டமளிப்பு உரையாற்றியதாவது: கல்வி அறிவையும் திறனையும் வளர்க்கிறது. ஆயிரக்கணக்கானோருக்கு கிடைக்காத கல்வி நமக்கு கிடைத்துள்ளது என பட்டம் பெற்றோர் உணர வேண்டும். இதன் மூலம் ஜாதி மதம் பொருளாதார பாகுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்கும் மனநிலை ஏற்பட வேண்டும். தற்போது சுற்றுச்சூழல் சீரழிவு புவி வெப்பமயமாதல் பிரச்னையை உலகம் எதிர்கொண்டுள்ளது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுடன் கூடிய தொழில்மயமாக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.துணைவேந்தர் கிருஷ்ணன் பேசுகையில் "இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை பல்கலை உருவாக்கியுள்ளது. கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையால் தேசிய அளவில் (என்.ஐ.ஆர்.எப்.) 54வது தரத்தில் இருந்து 45வது இடத்திற்கு முன்னேறியுள்ளது" என்றார்.உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் செயலாளர் மங்கத்ராம் சர்மா பல்கலை பதிவாளர் சுதா சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், ராமகிருஷ்ணன், பாரி பரமேஸ்வரன், லில்லிஸ் திவாகர், கலெக்டர் ராஜசேகர், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவில் 271 பேருக்கு பி.எச்.டி. உட்பட 51,528 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...