Sunday, September 29, 2019

உதித்சூர்யா வருகை பதிவேட்டில் திருத்தம் :பேராசிரியர்கள் மீது போலீசில் புகார்

Added : செப் 28, 2019 23:34

தேனி, :'நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்திய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆள் மாறாட்ட பிரச்னை துவங்கியதில் இருந்தே தேனி மருத்துவ கல்லுாரி பற்றி பல்வேறு புகார்கள் கிளம்பின. உதித் சூர்யா செப்.11ல், 'படிக்க விரும்பமில்லை' என கடிதம் கொடுத்துவிட்டு கல்லுாரியை விட்டு வெளியேறினார். அவருக்கு அன்று வருகை பதிவேட்டில் 'பிரசன்ட்' போடப்பட்டிருந்தது. இது செப்.19ல் திருத்தப்பட்டு 'ஆப்சென்ட்' என போடப்பட்டிருந்தது.இக்குளறுபடி நாளிதழ்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லுாரி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாணவரின் வருகை பதிவேடு திருத்தியது குறித்து விவாதிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டது.போலீசில் புகார்'உதித்சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்திய கல்லுாரி பேராசிரியர் வேல்முருகன், உதவி பேராசிரியர் திருவேங்கடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நேற்று தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் நேற்று போலீசில் புகார் அளித்தார்.இப்புகார் 'நீட்' ஆள் மாறாட்ட வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024