Friday, September 27, 2019

சித்தா படிப்பு கவுன்சிலிங் 400 இடங்கள் ஒதுக்கீடு

Added : செப் 26, 2019 23:43

சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. முதல் நாளில் 400க்கும் மேற்பட்டோர் இடங்கள் ஒதுக்கீடு பெற்றனர்.
இந்திய முறை மருத்துவ படிப்புகளான சித்தா ஆயுர்வேதம் யுனானி ஓமியோபதி படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1038 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில் 1455 மாணவர்கள் இடம் பெற்றனர்.கவுன்சிலிங் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கியது. தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.முதல் நாளில் சிறப்பு பிரிவினர் மற்றும் பொது பிரிவினர் என 400க்கும் மேற்பட்டோர் இடங்கள் பெற்றனர்.அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் 28ம் தேதி வரையும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் செப். 28,29ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன.





No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...