இன்று உலக சுற்றுலா தினம் சேலத்தில் கொண்டாட்டம்
Added : செப் 27, 2019 01:10
சென்னை தமிழக சுற்றுலாத்துறை சார்பில், உலக சுற்றுலா தினம், சேலத்தில் இன்று, பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஐ.நா., சபை அறிவிப்பின்படி, 1970 முதல், செப்டம்பர், 27ல், உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் தமிழகம், ஆண்டுதோறும், சுற்றுலா தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது.கடந்த ஆண்டு, மதுரையில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு சுற்றுலா தினம், சேலத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில், பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவற்றில், உணவு திருவிழா, சுற்றுலா -கலை விழா பேரணி, சிறப்பு கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. சேலம் மாவட்ட சுற்றுலா கையேட்டை வெளியிட்டு, முதல்வர், இ.பி.எஸ்., சிறப்புரையாற்ற உள்ளார்.

No comments:
Post a Comment