Friday, September 27, 2019

மாவட்ட செய்திகள்

ஆசைக்கு இணங்குமாறு கூறி: பெண் பேராசிரியரை மிரட்டிய ஆந்திர மாணவர் கைது

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், ஆசைக்கு இணங்குமாறு கூறி பெண் பேராசிரியரை மிரட்டிய ஆந்திர மாணவர் கைது செய்துள்ளார்.

பதிவு: செப்டம்பர் 24, 2019 04:30 AM 

சோழிங்கநல்லூர்,

ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் தனியார் விடுதியில் தங்கியிருந்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிபேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவேஷ் (வயது 23) என்ற மாணவர் அம்பத்தூரில் தங்கி படித்து வந்துள்ளார். இருவரும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நன்றாக பழகி வந்து உள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர் தனக்கு பிறந்தநாள் என கூறி அந்த பெண் பேராசிரியரை மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மறைவான இடத்தில் வைத்து அவரிடம் தவறாக நடக்க முற்பட்டு, அதை தனது செல்போனில் காட்சிகளாக பதிவுசெய்துள்ளார்.

பின்னர் அவரை மீண்டும் சோழிங்கநல்லூர் விடுதிக்குகொண்டுவந்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அந்தப்பேராசிரியரிடம் போன் செய்து தனது செல்போனில் படமாக எடுத்துள்ளதை கூறி அவரை தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பெண் பேராசிரியர் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024