Monday, September 30, 2019

இட்லி, வடை, தோசை, சாம்பார்: அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய பிரதமர் மோடி பேச்சு

By DIN | Published on : 30th September 2019 02:00 PM |

 

''இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019'' என்ற நிகழ்ச்சியும் தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது சென்னையின் சிற்றுண்டி குறித்து குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியது, அரங்கு முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

கடந்த 36 மணிநேரங்களுக்கும் மேலாக நீங்கள் அனைவரும் கடுமையாக பணியாற்றி பல சவாலான காரியங்களை செய்து முடித்து சாதனைகளைப் படைத்துள்ளீர்கள். உங்கள் அனைவரின் உற்சாகத்துக்கும், உத்வேகத்துக்கும் எனது பாராட்டுக்கள். இத்தனைக்கும் மத்தியில் யாரும் சோர்வடையாமல் உள்ளீர்கள். மிகப்பெரிய காரியத்தை செய்து முடித்த திருப்தி மட்டுமே இங்கு தெரிகிறது.

இதற்கு சென்னையின் தனித்துவமிக்க சிறப்பான இட்லி, வடை, தோசை, சாம்பார் போன்ற சிற்றுண்டியும் தான் காரணம் என்று கருதுகிறேன்.

சென்னையின் கலாசாரமும், பாரம்பரியமும், விருந்தோம்பலும் மிகச்சிறப்பானது. சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ள விருந்தினர்களும் சென்னையின் இந்த தனிச்சிறப்பை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024