Friday, September 27, 2019

ஆதாருடன் 'பான்' இணைக்க 30ம் தேதி கடைசி நாள்

Updated : செப் 27, 2019 03:50 |

புதுடில்லி: இம்மாத இறுதிக்குள், ஆதாருடன், 'பான்' எண்ணை இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், இம்மாதம், 30 உடன், முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகும், ஆதாருடன், பான் எண் இணைக்கப்படவில்ல எனில், அந்த குறிப்பிட்ட பான் அட்டை, பயனற்றதாகி விடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது.அதன் பின், அந்த அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா என்பது பற்றி, அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...