Wednesday, September 25, 2019

தொலைநிலை கல்வி: யு.ஜி.சி., நெருக்கடி

Added : செப் 25, 2019 00:09


சென்னை 'தொலைநிலை கல்வியில் செப். 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்' என யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் தொலைநிலையில் படிப்புகளை நடத்த பல்கலை கழக மானிய குழுவான யு.ஜி.சி. அங்கீகாரம் வழங்குகிறது. யு.ஜி.சி.யின் விதிகள் மற்றும் அங்கீகாரத்தின் படி அதற்கான பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இதன்படி அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஜூலையில் அங்கீகாரம் பெற்று மாணவர் சேர்க்கையை துவங்கிய அனைத்து கல்வி நிறுவனங்களும் தொலைநிலையில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை செப். 30க்குள் முடிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை அக். முதல் வாரத்திற்குள் யு.ஜி.சி.க்கு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024