Tuesday, September 10, 2019

தொலை துார பஸ்களில் தீபாவளி முன்பதிவு மந்தம்

Added : செப் 10, 2019 02:47

தொலைதுார பஸ்களில், தீபாவளி டிக்கெட் முன்பதிவு மந்தமாக உள்ளது. தீபாவளிக்கு, இன்னும் ஒன்றரை மாதம் உள்ள நிலையில், தொலைதுார பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு, ஆக., 27ல் துவங்கியது.
ஓரிரு நாட்களில், முன்பதிவு சுறுசுறுப்பாக இருந்த நிலையில், தற்போது மந்தமாகியுள்ளது. கடந்த வார நிலவரப்படி, 40 சதவீத டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவாகியுள்ளன.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளிக்கு, எஸ்.இ.டி.சி., சார்பில், சென்னை யில் இருந்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.நடப்பாண்டு தீபாவளி, ஞாயிற்றுக் கிழமை வருவதால், அடுத்தடுத்த நாட்களில், விடுமுறை குறித்து திட்டமிட முடியாது. எனவே, பலரும் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் காத்திருக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024