Friday, November 8, 2019

ரூ.200க்கு பதில் ரூ.500 வாரி வழங்கிய ஏடிஎம்: குஷியில் குவிந்த வாடிக்கையாளர்கள்

By DIN | Published on : 08th November 2019 09:51 AM 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் குழியில் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சேலம், ஓமலூர் பண்ணப்பட்டியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இருந்து ரூ.200க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. இதனால் குஷி அடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் எடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் பணம் மாறி வந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும், பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024