Thursday, November 28, 2019

காளஹஸ்தியில் பலி பூஜை தமிழகத்தை சேர்ந்த ஐவர் கைது

Added : நவ 27, 2019 23:58

திருப்பதி, காளஹஸ்தியில் பலி பூஜை நடத்திய தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேரை காளஹஸ்தி போலீசார் கைது செய்தனர்.ஆந்திரமாநிலம் காளஹஸ்தியில் உள்ள பைரவகோண மலையில் காலபைரவர் கோவில் உள்ளது. ஆங்கில புத்தாண்டு மகாசிவராத்திரி உள்ளிட்ட சில விசேஷ தினங்களை தவிர்த்து மக்கள் இங்கு அதிகம் வர மாட்டார்கள்.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலர் இங்கு பலி பூஜை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி பூஜை நடத்தினர்.இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் காளஹஸ்தீஸ்வரன் கோவிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவரையும் கைது செய்தனர்.இதுகுறித்து 24 மணிநேரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என காளஹஸ்தி போலீஸாருக்கு ஆந்திர அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாஸ் உத்திரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024