Thursday, November 21, 2019

சர்க்கரை கார்டுக்கு டிசம்பர் முதல் அரிசி

Added : நவ 20, 2019 23:11

சென்னை சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றம் செய்வோருக்கு டிச. மாதம் முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சர்க்கரை கார்டு மாற்றம் தொடர்பாக நவ. 26ம் தேதி வரை விண்ணப்பங்களை வாங்க அரசு அவகாசம் வழங்கி உள்ளது. விண்ணப்பங்கள் பெற்ற பின் அந்த கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற உதவி ஆணையர்கள் வட்ட வழங்கல் அதிகாரிகள் முறைப்படி ஒப்புதல் அளித்து தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவர்.ரேஷன் கடைகளுக்கு இம்மாத அரிசி ஒதுக்கீடு முடிந்து விட்டது. இதனால் டிச. மாதம் முதல் அரிசி கார்டுகளாக மாறிய சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024