Thursday, November 28, 2019

சேலம், கரூர் வழியாக தென் மாவட்ட ரயில்கள்

Added : நவ 28, 2019 00:19

சேலம், :நாகர்கோவில் - மும்பை திருநெல்வேலி - மும்பை ரயில்கள் இனி கரூர் வழியாக இயக்கப்படவுள்ளது.சேலம் - கரூர் இடையே அகல ரயில்பாதை அமைக்கப்பட்ட பின்பும் அந்த வழியில் குறைந்தளவே ரயில்கள் இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை இந்த வழியில் இயக்க கோரிக்கை எழுப்பி வந்தனர்.ஈரோடு, கரூர் வழியாக இயக்கப்பட்ட நாகர்கோவில் - மும்பை, திருநெல்வேலி - மும்பை உள்ளிட்ட ரயில்கள் சேலம் நாமக்கல் கரூர் வழியே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திங்கள், செவ்வாய், புதன், வெள்ளியில் இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் டிச. 2 முதலும் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் மும்பை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் டிச. 1 முதலும் கரூர் வழியாக இயக்கப்படும்.திங்கள், வியாழன், வெள்ளியில் இயக்கப்படும் திருநெல்வேலி - மும்பை தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் டிச. 9ல் இருந்தும் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் மும்பை - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் டிச. 7ல் இருந்தும் கரூர் வழியே இயக்கப்படும்.இந்த ரயில்களில் ஈரோட்டிலிருந்து முன்பதிவு செய்தவர்கள் அதே டிக்கெட்டில் சேலம் அல்லது கரூருக்கு இணைப்பு ரயிலில் பயணிக்கலாம். இதற்கு ஸ்டேஷன்களில் உள்ள உதவி மையங்களை அணுகலாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024