Sunday, January 19, 2020

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு 15.02 லட்சம் பேர் சென்று திரும்பினர்

Added : ஜன 19, 2020 01:44

சேலம்:பொங்கல் பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு பஸ், ரயில்களில், ஒரு வாரத்தில், 20 லட்சம் பேர்பயணித்துள்ளனர்.கடந்த, 2018ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து, 4.92 லட்சம் பேர்; 2019ல், 7.10 லட்சம் பேர், ரயில், அரசு மற்றும் ஆம்னி பஸ்களில், சொந்த ஊர்களுக்கு சென்றனர்.தொடர் விடுமுறைபிற நகரங்களில் இருந்து, 2018ல், 3.75 லட்சம் பேர்; 2019ல், 4.74 லட்சம் பேர், சொந்த ஊருக்கு பயணித்தனர்.

மொத்தமாக, 2018ல், 9.75 லட்சம் பேர்; 2019ல், 15.02 லட்சம் பேர், சொந்த ஊருக்கு சென்று, மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பினர்.நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, 11ம் தேதி முதல், இன்று வரை, தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது.இதனால், 10ம் தேதி முதல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பலர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.ரயில்களில் கூட்டம்சென்னையில் இருந்து, 10ம் தேதி முதல், 14ம் தேதி வரை, 9.10 லட்சம் பேர்; கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்து, 11.39 லட்சம் பேர், சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.இதன்மூலம், நடப்பாண்டில், 20 லட்சத்து, 50 ஆயிரத்து, 440 பேர், சொந்த ஊர்களுக்கு சென்று, நேற்று முன்தினம் முதல், மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.இதனால், தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள்,ரயில்கள் பயணியர் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

இத்தகவல், போக்கு வரத்துக்கழக வணிக பிரிவு அதிகாரிகள் கணக்கீட்டின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.120 கோடி வருவாய்போக்குவரத்துக்கழக வணிக பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:தொடர் விடுமுறையால், 10 நாட்களாக, அரசு பஸ்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. சொந்த ஊருக்கு சென்ற பலர், சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். தொடர்ந்து, பஸ்கள், 'ஹவுஸ்புல்' ஆகவே இயக்கப்பட்டு வருகின்றன. 10 நாட்களில், அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு, 120 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024