Sunday, January 19, 2020

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்க கோரிக்கை

Added : ஜன 18, 2020 23:17

சென்னை:சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினமும் இயக்குமாறு, அருப்புக்கோட்டை பயணியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, எழும்பூரில் இருந்து, தென்காசி மாவட்டம், செங்கோட்டைக்கு, வாரத்தில், மூன்று நாட்கள், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதை, தினமும் இயக்குமாறு, தென்காசி எம்.பி., தனுஷ்குமார், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர், அருப்புக்கோட்டை ரயில் பயணியர் சங்க தலைவர் மனோகரன், டில்லியில், ரயில்வே வாரிய தலைவரை சந்தித்து, மனு அளித்தனர்.அந்த மனுவின் விபரம்: சென்னை, எழும்பூரில் இருந்து, சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரத்தில், மூன்று நாட்கள், செங்கோட்டைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணியரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், மூன்று நாட்களும், 'ஹவுஸ்புல்' ஆகி, படுக்கை வசதிக்கு, தினமும், 150 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதை தவிர்க்க, சென்னை - செங்கோட்டை இடையே, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, தினமும் இயக்க வேண்டும்.

அதேபோல், தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், மீண்டும் இயக்கப்பட வேண்டும். இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 6:00 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து, அதிகாலை, 5:00 மணிக்கும், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024