புதிய ரேஷன் கார்டுக்கு இனியும் தாமதம் ஏன்?
Added : ஜன 18, 2020 23:16
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்தும், புதிய மற்றும், 'டூப்ளிகேட்' எனப்படும் மாற்று ரேஷன் கார்டுகளை வழங்காமல், உணவு துறை அதிகாரிகள் தாமதம் செய்வதால், பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டுகள் அவசியம்.
சந்தேகம்
இதனால், புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்ததில் தகுதியானவர்களுக்கு, அடுத்த மாதமாவது, ரேஷன் கடைகளில், பொருட்கள் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பரிசு வழங்கும் பணியில், கவனம் செலுத்தியதால், ரேஷன் கார்டுகள் வழங்க முடிய வில்லை. இனி, விரைவாக வழங்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் -

தனி குடும்பத்துடன் வசிப்பவர்கள், பொது வினியோக திட்ட இணையதளத்தில், மத்திய அரசின், 'ஆதார்' எண்ணுடன், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.அதை, சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர்களும், மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அதிகாரிகளும் பரிசீலித்து, கார்டு வழங்க ஒப்புதல் தருவர்.ஏற்கனவே, ரேஷன் கார்டுகள் வாங்கியவர்களில் சிலர், அதை தொலைத்து விட்டனர். இதனால், மாற்று ரேஷன் கார்டுகள், 20 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்பட உள்ளன.தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019 டிசம்பர் இறுதியில் நடந்தது. இதனால், நடத்தை விதி காரணமாக, அந்தமாதம், ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.இம்மாத துவக்கத்தில், ஓட்டு எண்ணிக்கை முடிந்து, நடத்தை விதியும்ரத்தாகி விட்டது.இருப்பினும், ஆய்வு முடிந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கும்; ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கும், புதிய மற்றும் மாற்று கார்டுகளை வழங்காமல், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.
சந்தேகம்
இதனால், புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்ததில் தகுதியானவர்களுக்கு, அடுத்த மாதமாவது, ரேஷன் கடைகளில், பொருட்கள் கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்து உள்ளது.இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பரிசு வழங்கும் பணியில், கவனம் செலுத்தியதால், ரேஷன் கார்டுகள் வழங்க முடிய வில்லை. இனி, விரைவாக வழங்கப்படும்' என்றார்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment