Sunday, January 19, 2020

பொங்கல் பணம் ரூ.1,000 நாளையும் வாங்கலாம்

Added : ஜன 18, 2020 23:13

சென்னை:ரேஷன் கடைகளில், 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத, அரிசி கார்டுதாரர்கள், நாளையும், நாளை மறுதினமும் வாங்கலாம்.தமிழகத்தில், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.
அதில், இரண்டு கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசு தொகுப்பை, தமிழக அரசு அறிவித்தது. இவை, இம்மாதம், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டன. 

பொங்கல் பரிசு வழங்கியதில், தர்மபுரி மாவட்டம், 99.25 சதவீதம்; வேலுார், 99.15 சதவீதத்துடன் முதல், இரண்டு இடங்களில் உள்ளன.கோவை, சென்னை முறையே, 96.69 சதவீதம் மற்றும் 96.56 சதவீதத்துடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.மற்ற மாவட்டங்களில், 97 முதல், 98 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக, 98.05 சதவீதம் அதாவது, 1.96 கோடி கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு வாங்கியுள்ளனர்.

பொங்கலை கொண்டாட, பலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், இதுவரை, 3.91 லட்சம் கார்டு தாரர்கள் வாங்கவில்லை.அவர்கள், வரும், 21ம் தேதி வரை, பொங்கல் பரிசு வாங்கலாம் என, அரசு அறிவித்தது. அதன்படி, பரிசு தொகுப்பு வாங்காத அரிசி கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளில், நாளையும், நாளை மறுதினமும் வாங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024