Sunday, January 19, 2020

இதே நாளில் அன்று

Added : ஜன 18, 2020 21:24




ஜனவரி 19, 1933எஸ்.கோவிந்தராஜன்:நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில், சிவசிதம்பரம் -- அவையாம்பாள் தம்பதிக்கு, 1933ல் பிறந்தார். சென்னை இசைக் கல்லுாரியில், 1951ல் பயின்ற அவர், தன், 19வது வயதில், சங்கீத வித்வான், இசைமணி ஆகிய பட்டங்களை பெற்றார்.பொன் வயல்என்ற படத்துக்காக, 1953ல், 'சிரிப்புத் தான் வருகுதைய்யா' என, துவங்கும் பாடல் தான், இவரது திரைப்படத் துறையின் முதல் பாடல். ஆனால், அப்பாடலுக்கு முன்பே, ஜெமினி நிறுவனம் தயாரித்த,அவ்வையார்திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். அந்த திரைப்படத்தில், சீர்காழி கோவிந்தராஜன் பெயர் வெளியிடப்படவில்லை.எம்.ஜி.ஆர்., -- சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகருக்கு, ஏராளமான பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். முருகன், விநாயகர் பக்தி பாடல்களும் பாடியுள்ளார்.அகத்தியர்உள்ளிட்ட, சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான, சீர்காழி கோவிந்தராஜன், 1988 மார்ச், 24ல் இறந்தார்.அவர் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024