ரேஷனில் பொங்கல் பரிசு 21ம் தேதி வரை அவகாசம்
Added : ஜன 13, 2020 23:01
சென்னை : ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வாங்குவதற்கான அவகாசம், வரும், 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், இரண்டு கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.இது, 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று வரை, 1.91 கோடி கார்டுதாரர்களுக்கு, பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதை வாங்குவதற்கான அவகாசம், நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு, உணவு வழங்கல் ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொங்கல் பரிசு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கத் தொகையை, அனைத்து அரிசி கார்டுதாரர்களும் பெற வேண்டும் என்பதால், அவற்றை வழங்குவதற்கான அவகாசம், வரும், 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட அரிசி கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளின் வேலை நாட்களில், பரிசு தொகுப்பு பெற்று கொள்ளும் வகையில், தகுந்த அறிவுரைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment