Tuesday, January 14, 2020

செல்லாத நோட்டுகளுடன் பரிதாப மூதாட்டி

Added : ஜன 13, 2020 23:44





வேலுார்: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும்படி, 12 ஆயிரம் ரூபாயுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டியால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு, வேலுார், சலவன்பேட்டை சூளைமேட்டைச் சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரி, 65, வந்தார். அவர், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 - 1,000 நோட்டுகள், 12 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். அதனுடன், தான் கொண்டு வந்த மனுவை, டி.ஆர்.ஓ., பார்த்திபனிடம் வழங்கினார்.

மனுவில் கூறியுள்ளதாவது: கணவரை இழந்து, யார் ஆதரவுமின்றி, குடிசையில் வசிக்கிறேன். கூலி வேலை செய்து, அதில் சேர்த்த, 12 ஆயிரம் ரூபாயை, பானையில் போட்டு வைத்திருந்தேன். மருத்துவ செலவுக்கு அந்த பணத்தை கொடுத்த போது வாங்க மறுத்தனர். அப்போது தான், இந்த பணம் செல்லாது என்பது தெரிந்தது. இந்த பணத்தை மாற்றித் தர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள், 'இனி இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது' எனக் கூறினர். இதைக் கேட்டு, மூதாட்டி கண்ணீர் விட்டார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024