Sunday, January 5, 2020

சொர்க்கவாசல் திறப்பு: நேரலை ஒளிபரப்பு

Added : ஜன 04, 2020 22:01

மதுரை: ஜன., 6ல் பெருமாள் கோவில்களில் நடக்கும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், 'தினமலர்' இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

அதிகாலை, 4:30 மணிக்கு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்; 4:45 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் மற்றும் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.காலை, 5:30 மணிக்கு, கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் கோவை காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள், www.dinamalar.com என்ற, 'தினமலர்' இணையதளத்தில் ஒளிபரப்பப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024