Sunday, January 5, 2020

பொங்கல் சிறப்பு பஸ்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

Added : ஜன 04, 2020 21:38

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறைக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பஸ்கள் குறித்த பட்டியலை தயாரிக்க, மண்டல மேலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங்கல் பண்டிகை, 15ம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதனால் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.சிறப்பு பஸ் எண்ணிக்கை மற்றும் நேரம் ஆகிய விபரத்தை, எட்டு மண்டல மேலாளர்கள் தயாரிக்கும்படி, போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விடுமுறை, 14ம் தேதி துவங்கினாலும், 12ம் தேதி முதல், சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த கலெக் ஷன் குறித்து ஆய்வு செய்து, அதற்கேற்ப இம்முறை பட்டியல் தயாரிக்கப்படும்' என்றார்
- நமது நிருபர் -.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024