Sunday, January 5, 2020

நாளை வேட்டி தினம் கடைபிடிக்க உத்தரவு

Added : ஜன 05, 2020 01:30

புதுச்சேரி:உலக வேட்டி தினத்தையொட்டி நாளை அரசு துறைகளில் வேட்டி தினம் கொண்டாட சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி ஆகும். ஆனால், இன்றைய இளம் தலைமுறையிடையே வேட்டி கட்டும் ஆர்வம் குறைந்து வருகிறது. உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6-ம் தேதி சர்வதேச வேட்டி தினம் அறிவித்துள்ளது. மத்திய அரசும் உலக வேட்டி தினம் கடை பிடிக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி நாளை 6ம் தேதி புதுச்சேரி அரசு துறைகளில் உலக வேட்டி தினம் கொண்டாட சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தலைமை செயலக சார்பு செயலர் கண்ணன் அரசு துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், கைத்தறி பயன்பாட்டை கொண்டு வரும் வகையில் நாளை 6ம் தேதி உலக வேட்டி தினம் கடை பிடிக்கப்படுகிறது.எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வேட்டி தினத்தை கடைபிடித்து அன்றைய தினம் வேட்டி அணிந்து வந்து ஏழை நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முன்வர வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024