Thursday, January 9, 2020

பரிசு பெறும் டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை?: மருத்துவ கவுன்சிலுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

Added : ஜன 09, 2020 00:51

சென்னை: 'மருத்துவ கவுன்சில் தடை விதித்தும், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசு பொருட்கள் பெறும் டாக்டர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

'போர்ட்ஸ் இந்தியா லேப்' என்ற மருந்து நிறுவனம், ௨௦௧௨ - ௧௩ம் ஆண்டுக்கான வருமான கணக்கை தாக்கல் செய்தது. கணக்கில், ௧௪.௬௯ கோடி ரூபாய் வருமானம் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.பின், உரிமம் மற்றும் வரிக்கான தொகையாக, ௫.௪௫ கோடி ரூபாய், விற்பனை உயர்வு செலவாக, ௪௨.௮௧ லட்சம் ரூபாயை, வருமானத்தில் கழிக்கும்படி கோரப்பட்டது.விற்பனை அதிகரிப்புக்கான செலவில், டாக்டர்களுக்கு அளிக்கப்பட்ட தொகையும் அடங்கி உள்ளது.

 இதனால், இந்த நிறுவனத்துக்கு எதிராக, வருமான வரித்துறை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.விசாரித்த, நீதிபதிகள்கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு:பரிந்துரைஅதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படுவதாகவும், மருந்து நிறுவனங்களின் துாண்டுதலின்படி, கமிஷன் தொகைக்காக, தேவையற்ற பரிசோதனைகளை, மருந்துகளை டாக்டர்கள் சிலர் பரிந்துரைப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.சந்தையில் தங்கள் மருந்துகளை விற்பதற்காக, டாக்டர்களுக்கு பரிசு பொருட்கள், வெளிநாட்டு சுற்றுலா என, வாரி வழங்குகின்றன.

டாக்டர்களின் பரிந்துரையால், மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு, நோயாளிகள் தள்ளப்படுகின்றனர். பணம், உபசரிப்பு, பரிசுப் பொருட்கள், பயண சலுகையை, மருந்து நிறுவனங்களிடம் இருந்து டாக்டர்கள் பெற, மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.சட்டத்தில் தடை இருந்தும், டாக்டர்களுக்கு பரிசுப் பொருட்கள், பயண ஏற்பாடுகள் செய்து, மருந்து நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. சட்டவிரோதமாக, அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்வதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விற்பனையை அதிகப்படுத்த மேற்கொண்ட செலவுக்கு, வருமான வரியில் கழிவு கோருவது அதிர்ச்சி அளிக்கிறது.டாக்டர்களுக்கு பணம் கொடுப்பது; அதிக விலைக்கு மருந்துகளை விற்பதால், மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.கேள்விகள்எனவே, இந்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறை, ரசாயனத் துறை, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், மருத்துவ கவுன்சில் ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர்.மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன், மருத்துவ கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் வி.பி.ராமன் ஆகியோர், கீழ்கண்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்க வேண்டும்.

பரிசுப் பொருள், பயண செலவு வாங்கும் டாக்டர்களுக்கு எதிராக, இந்திய மருத்துவ கவுன்சில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது; கவுன்சில் விதிமுறைகளை மீறியதற்காக, ஏழு ஆண்டுகளில், எத்தனை டாக்டர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது?

போர்ட்ஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து, அன்பளிப்பு பெற்ற டாக்டர்கள் யார் யார்; அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஐந்து ஆண்டுகளில், எத்தனை மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது; அதிக விலை விற்பனையை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

டாக்டர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கிய விதத்தில், வருமான வரி கழிப்பு, எத்தனை மருந்து நிறுவனங்கள் கோரி உள்ளன; அதிக விலைக்கு மருந்து விற்பனை செய்ததது தொடர்பாக, எத்தனை புகார்கள் வந்துள்ளன?

மருந்து மற்றும் மருந்து உபகரணங்களுக்கான தனி அமைச்சரவை, எப்போது ஏற்படுத்தப்படும்.இவ்வாறு கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், வரும், ௨௦ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024