Thursday, January 9, 2020

தஞ்சை மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் மணவர்கள் சந்திப்பு

Added : ஜன 09, 2020 03:27



புதுச்சேரி:தஞ்சை மருத்துவக் கல்லுாரியில் 1965ல் படித்த மாணவர்கள் புதுச்சேரியில் சத்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரியில், 1965ம் ஆண்டில், 135 மாணவ, மாணவியர் எம்.பி.பி.எஸ்., படித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும், கடந்த 2000 ஆண்டில், குடும்பத்துடன் சந்திக்க, புதுச்சேரி மக்கள் நீதி மையம் தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் முடிவு செய்தார்.தன்னுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவ கல்லுாரி நண்பர்களிடம் தகவல் தெரிவித்ததன்பேரில், அதே ஆண்டு புதுச்சேரியில் முதல் முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி முன்னாள் எம்.பி.பி.எஸ். மாணவர்கள், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன், தமிழகம், புதுச்சேரியில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்று அல்லது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை கூடி பேசியும், விளையாடி, தங்கள் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், 12வது சந்திப்பு நிகழ்ச்சி, புதுச்சேரி அருகே ஓஷன்ஸ் ஸ்பிரே ஓட்டலில் நடந்தது. வெளிநாடுகளில் குடும்பத்துடன் வசித்துவரும் தற்போது 70 வயதை கடந்துள்ள 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, தங்கள் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.2021 டிசம்பர் மாதம் மதுரையில் மீண்டும் கூடுவது என, முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024