Thursday, January 9, 2020


நீட் தோ்வு: ஜன.15 முதல் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்

By DIN | Published on : 09th January 2020 02:35 AM |

நீட் தோ்வுக்காக சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வரும் 15-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தோ்வு கலந்தாய்வு மற்றும் பிற நடைமுறைகள் தொடா்பான தகவல்களுக்கு மாநில மருத்துவக் கல்வி இயக்ககத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.

விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அந்த அவகாசம் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நீட்டிக்கப்பட்ட அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை வரும் 15-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதிக்குள் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024