Friday, January 10, 2020


செங்கல்பட்டு மருத்துவமனையில் தலைக்காயம் சிகிச்சை பிரிவு

Added : ஜன 09, 2020 22:46


சென்னை: ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காயம் சிகிச்சை பிரிவு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - கந்தசாமி: சூலுார் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றியம், மலையடிபாளையத்தில் உள்ள மருந்தகத்தை, 30 படுக்கைகள் வசதி உள்ள மருத்துவமனையாக, தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் விஜயபாஸ்கர்: தரம் உயர்த்த விதிகளில் இடமில்லாவிட்டாலும், தேவையான வசதிகளை செய்து தர, நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., - வரலட்சுமி: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும். செங்கல்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், தலைக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாததால், சென்னைக்கு அனுப்புகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சென்னை வருவதற்குள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத்தவிர்க்க, தலைக்காய சிகிச்சை பிரிவை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உடனடியாக துவக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரியில், நுாலகம் அமைத்து தர வேண்டும்.அமைச்சர்

விஜயபாஸ்கர்: நீங்கள் கூறியது ஏற்புடையது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தலைக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024