வழக்கை இழுத்தடிக்க, 'நிர்பயா' குற்றவாளி முயற்சி; தண்டனையை தள்ளிப்போட குறைதீர் மனு
Updated : ஜன 10, 2020 00:28 | Added : ஜன 10, 2020 00:26
புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில், குறை தீர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிர்ச்சி:
டில்லியில், 2012ல், 23 வயதான மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, துாக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி இறந்தார். மருத்துவ மாணவியின் பெயர் வெளியிடப்படாததால், ஊடகங்கள் அவரை, 'நிர்பயா' என பெயரிட்டு அழைத்தன.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 16 வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். இதில், சிறுவனுக்கு மட்டும், சிறார் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, மற்ற ஐந்து பேரில், ராம் சிங் என்பவர், துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். மற்ற நால்வருக்கும், விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, டில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதை எதிர்த்து, நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நான்கு பேருக்கும், வரும், 22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவரான வினய் குமார் சர்மா, தண்டனையிலிருந்து தப்பிக்க, கடைசி முயற்சியாக, 'கியூரேட்டிவ்' மனு எனப்படும், குறை தீர் மனு தாக்கல் செய்துள்ளர்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: என் குடும்பம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். என்னை நம்பி, என் வயதான பெற்றோர் உட்பட, பலர் உள்ளனர். சமூகத்தின் எண்ணம், மக்களின் கருத்து ஆகியவற்றை வைத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சூழ்நிலை:
எங்களது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், இதே போன்ற, 17 வழக்குகளில், கீழ் நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் விதித்த துாக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளன. ஆனால், எங்களுக்கு மட்டும் குறைக்கவில்லை. குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, என் துாக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, வினய்குமார் சர்மா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment