ரயில் பயணத்தில் சினிமா பார்க்கலாம்
Added : ஜன 15, 2020 23:58
புதுடில்லி: ரயில் பயணத்தின்போது தங்களுக்கு விருப்பமான சினிமா அல்லது நிகழ்ச்சியை பார்க்கும் வசதி 2022ல் பயணியருக்கு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தற்போது நாடு முழுவதும் உள்ள 5563 ரயில் நிலையங்களில் 'வை - பை' வசதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து ரயில்களிலும் வை - பை வசதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணத்தின் போது தங்களுக்கு விருப்பமான சினிமா 'டிவி' நிகழ்ச்சி இசை கல்வி நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி பயணியருக்கு வழங்கப்பட உள்ளது. சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.மேலும் தாங்கள் செல்லும் ஊர்களில் கார் பஸ் ரயில்களுக்கான முன்பதிவு வசதிகளையும் ரயில்களில் பயணிக்கும்போதே செய்து கொள்ளலாம். இதைத் தவிர ரயில்களில் மக்களுக்கு தேவையான தகவல்கள் அளிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவைகள் அளிப்பதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 2022ல் அனைத்து ரயில்களிலும் இந்த வசதி களைப் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment