பயணத்தை திடீரென ரத்து செய்த கால்டாக்சி நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
2020-01-13@ 00:17:47
சென்னை: பயணத்தை திடீரென ரத்து செய்த கால்டாக்சி நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெரம்பூரை சேர்ந்தவர் முத்துகுமார். இவர் திருமணத்துக்கு செல்வதற்காக, கடந்த 2013 ஆண்டு பிரபல கால் டாக்சி நிறுவனத்திடம் அதே ஆண்டு நவம்பவர் 6ம் தேதி திருமணத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, மாலை 5.30 மணிக்கு 13 பேர் பயணம் செய்வதற்காக, டெம்போ டிராவலர் வேன் கேட்டு பதிவு செய்துள்ளார். இதனை உறுதி செய்து கொண்ட நிறுவனம் அதற்காக ரூ.1,670 கட்டணம் தெரிவித்து, சரியான நேரத்துக்கு வருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால், பயணத்தை ரத்து செய்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். இதனால், திருமணத்திற்கு தயாராகி இருந்தவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பின்னர், புதியதாக வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து, இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்றுள்ளனர். அதற்குள் திருமணம் முடிந்துள்ளது.
பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு வருவதற்கு இரவு 12 மணி ஆகியுள்ளது. இதனால், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கால் டாக்சி நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு வாங்கி தருமாறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி, உறுப்பினர் பாஸ்கர் குமரவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வாகனத்தை திடீரென ரத்து செய்தும், அதற்கு மாற்று வாகனம் ஏற்பாடு செய்து தராமலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது உறுதியாகியுள்ளது. எனவே கால்டாக்சி நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment