Wednesday, March 25, 2020

வீட்டிற்கு செல்ல டாக்டர்களுக்கு தடை

Updated : மார் 25, 2020 06:17 | Added : மார் 25, 2020 06:15 |

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், வீட்டிற்கு செல்லாமல், மருத்துவமனையிலேயே தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி, நாகராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சையளிக்க கூடியவர்களுக்கு, அந்த பாதிப்பு நேரடியாக பரவ வாய்ப்புள்ளது. அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

எனவே, சுழற்சி முறையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களை, வீட்டிற்கு அனுப்பக் கூடாது. அவர்களை, மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைக்க வேண்டும். இது கட்டாயம் அல்ல; விருப்பப்பட்டால், உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்கு செல்லலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024