Sunday, April 5, 2020

'ஷேவிங் லோஷன்' குடித்த 3 பேர் பலி

Added : ஏப் 04, 2020 23:16

புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே, மதுபானம் கிடைக்காததால், 'ஷேவிங் லோஷன்' குடித்த, மூன்று பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா, 33. டூ - வீலர்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டம், பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டி, 29, மற்றும் துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ராஜா முகமது, 33. இருவரும், கோட்டைப்பட்டினத்தில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நண்பர்களான மூவரும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'ஷேவ்' செய்த பின், முகத்தில் தேய்க்க பயன்படுத்தப்படும், லோஷனை வாங்கி சென்று, கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அமர்ந்து, குளிர்பானத்தில் கலந்து குடித்து உள்ளனர்.

அப்போது, வாந்தி எடுத்து மயக்கமடைந்த மூவரும், சிகிச்சைக்காக, மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மூவரும் இறந்தனர். சம்பவம் குறித்து, கோட்டைப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024