Sunday, April 5, 2020

'கொரோனா'வில் இருந்து குணமான 3 பேர்

Added : ஏப் 05, 2020 01:58

சேலம் : கொரோனா அறிகுறியால் சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் ஒன்பது பேருக்கு, 'கொரோனா தொற்று உறுதி' செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த மூவர் குணமாகியுள்ளனர்.இதுபற்றி டீன் பாலாஜிநாதன் கூறுகையில், 'கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. புரத உணவுகள் வழங்கப்பட்டது. இந்த பராமரிப்பினால் மூவர் குணமடைந்துள்ளனர். ரத்த பரிசோதனை முடிவுகள் 'நெகடிவ்' என வந்துள்ளதால் நலமுடன் உள்ளனர். எனினும், அவர்களை மேலும், 14 நாள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024