Monday, April 6, 2020

தஞ்சை அருகே ஆளில்லா பேக்கரி

Added : ஏப் 05, 2020 23:50

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, ஆளில்லா பேக்கரி துவக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு எதிரே, சீனிவாசன், 50, என்பவர், 18 ஆண்டுகளாக, பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

தற்போது, ஊரடங்கு உத்தரவால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிரட், ரஸ்க், கோதுமை பிரட் கிடைக்கும் வகையில், ஆளில்லா கடையை துவக்கியுள்ளார். இதில், பிரட், ரஸ்க் பாக்கெட்டுகளில் விலையை எழுதி வைத்து, 'பணத்தை பெட்டியில் போட்டு, பொருளை எடுத்துக் கொள்ளுங்கள்' என எழுதி வைத்துள்ளார். சீனிவாசன் கூறியதாவது:ஊரடங்கு உத்தரவால், மருத்துவமனைக்கு வரும் மக்கள் பிரட், ரஸ்க் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படக் கூடாது என்பதற்காக, மூன்று நாட்களுக்கு முன், ஆளில்லா கடையை திறந்தேன். மக்கள், தங்களுக்கு தேவையானதை எடுத்து, பணத்தை பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். பணம் இல்லாதவர்கள், இலவசமாக எடுத்து செல்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024