மருத்துவ பொருட்களுக்கு 'டெண்டர்' வேண்டாம்
Added : ஏப் 08, 2020 22:35
சென்னை : கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான, மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை, அவசர தேவைக்கு கொள்முதல் செய்ய, ஒப்பந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான, முக கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை வாங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா தொற்று நோய், பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில், சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, பொதுப்பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைகள் ஈடுபட்டுள்ளன.
எனவே, நோய் பாதுகாப்பு கவசங்கள், நோய் தடுப்பு உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ உள்கட்டமைப்புக்கு தேவையான மரப் பொருட்கள், தனிமைப்படுத்தும் மையங்களை ஏற்படுத்த தேவையான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை, அவசர தேவைக்கு வாங்கிக் கொள்வதற்கு வசதியாக, இத்துறைகளுக்கு, தமிழ்நாடு வெளிப்படையான ஒப்பந்த சட்டத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறைகள், தேவைக்கேற்ற பொருட்களை, நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள முடியும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment