Sunday, April 26, 2020


விருதுநகரில் மேலும் இருவருக்கு கொரோனா

Added : ஏப் 26, 2020 03:58


விருதுநகர்:விருதுநகரில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியானது.

விருதுநகர் அருகே குமராபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவிக்கு கொரோனா ஏற்பட இவரது   உறவினர் இருவருக்கும் தொற்று பரவியது. குமராபுரம் மக்களுக்கு சோதனை செய்ததில் 26 வயது தனியார் ஊழியருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியை சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா உறுதியானது.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்த இவர் கடந்த மாதம் 3 நண்பர்களுடன் காரில் வீடு திரும்பினார். வெளியூரில் இருந்து வந்தவர்களை சோதனை செய்தபோது இவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று வெளியான முடிவில் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்ட பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது.

குமராபுரம் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில் செட்டிக்குறிச்சி சீல் வைக்கப்பட்டு     பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது.

திருநெல்வேலி: அரசு மருத்துவமனையில் நேற்று ஒருவர் டிஸ்சார்ஜ் ஆனார். 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 30 பேர் உள்பட 32 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4 பெண்கள் உள்பட 5 பேர் நோய் தொற்று உறுதி படுத்த பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு37 ஆக உயர்ந்தது.துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேற்று ஒரு தாயும், மகனும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் இருந்து வந்தவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 23 வயது வாலிபருக்கும், 78 வயது மூதாட்டிக்கும் நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு கொரோனா பரவிய காரணம் தெரியாமல் சுகாதாரத்துறை குழம்பியது. இந்நிலையில், சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வாலிபரும், சென்னை மகன் வீட்டில் இருந்த மூதாட்டியும் சில நாட்களுக்கு முன்பு தான் பரமக்குடிக்கு திரும்பியது தெரியவந்தது.

இவர்களுடன் தொடர்புடைய குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட 50 பேருக்கு ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...