Thursday, April 9, 2020

என்னை தகராறில் சிக்க வைக்க நடக்கும் சதி: மோடி எச்சரிக்கை ட்வீட்

By DIN | Published on : 08th April 2020 06:14 PM |

பிரதமர் மோடி

புது தில்லி: என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் புதன் மாலை வேகமாகத் தகவல் பரவியது.

இந்நிலையில் என்னை தகராறில் சிக்க வைக்க சதி நடப்பதாக பிரதமர் மோடி எச்சரிக்கை ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்சியாகப் பதிவிட்டுள்ளதாவது:

பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என சமூக வலைதளங்களில் சிலர் பிரசாரம் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. முதலில் பார்க்கும்போது என்னைத் தகராறில் சிக்க வைக்க பெயரை பயன்படுத்தி சதி நடப்பதாகத் தோன்றுகிறது.

ஒருவேளையாரவது என்மீது உள்ள அபிமானத்தில் கூட செய்திருக்கலாம். ஆனால் நான் வலியுறுத்துவது என்னவென்றால், உண்மையிலேயே என்மீது அன்பும், எனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால், ஒரு ஏழைக் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். கரோனா வைரஸ் இருக்கும்வரை இதுபோல தேவை இருக்கும். இதைவிட எனக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 8.4.2025