Thursday, April 2, 2020

அனைவரும் வீட்டிலேயே இருங்கள்: முதல்வர் வேண்டுகோள்!

Updated : ஏப் 02, 2020 00:26 | Added : ஏப் 01, 2020 23:28




'கொரோனா நோயை கட்டுப்படுத்த, அனைவரும் வீட்டிலேயே இருங்கள்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள, 'ஆடியோ'வில், அவர் கூறியிருப்பதாவது: உங்கள் முதல்வர் பழனிசாமி பேசுகிறேன்... உலகெங்கும் தீவிரமாக பரவி வரும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த, ஜெ., அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

உங்கள் ஒவ்வொருவரின் நலனும், எங்களுக்கு முக்கியம். உங்கள் நலன் கருதி, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், முழு ஒத்துழைப்பு நல்க, அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நோயை கட்டுப்படுத்த, விழித்திருங்கள்; விலகி இருங்கள்; வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024