Friday, May 1, 2020

தஞ்சை மருத்துவமனையில் பிடிபட்ட 12 விஷ பாம்புகள்

Added : மே 01, 2020 01:54

தஞ்சாவூர்:தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில், விஷத் தன்மைஉடைய, 12க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டன.

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில், மகப்பேறு பிரிவு, பெண்களுக் கான சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவுகள் உள்ளன.மருத்துவமனை வளாகத்தில், பல இடங்களில் புதர்கள் மண்டி இருந்ததால், விஷத்தன்மையுடைய பாம்புகள் வருவதாக புகார்கள் எழுந்தது. சில நாட்களுக்கு முன், மருத்துவமனை துாய்மைப் பணியாளர் செல்வி, 45, என்பவரை பாம்பு கடித்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தங்கும் விடுதி, துாய்மை பணியாளர் ஓய்வு அறை உள்ளிட்ட பகுதிகளில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.அங்குள்ள பாம்புகளை பிடிக்க, அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அறக்கட்டளையைச் சேர்ந்த சதீஷ்குமார் தலைமையிலான, எட்டு பேர் குழுவினர், ஐந்து கண்ணாடி விரியன் பாம்புகள், இரண்டு சாரைப் பாம்புகள், மூன்று சிறு வகை பாம்புகள் என, 10 பாம்புகளைப் பிடித்தனர்.தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்று, சாரை, நல்ல பாம்பு என, இரண்டு பாம்புகள் பிடிபட்டன. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024