ஆதார்' திருத்தம் இனி எளிது!
Updated : மே 01, 2020 03:45 | Added : மே 01, 2020 03:42
திருப்பூர் : பொது சேவை மையங்களில், 'ஆதார்' திருத்தம் மேற்கொள்ள முடியும் என்பதால், விவசாயிகள் உட்பட கிராமப்புற மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத்துறை சார்பில், நாடு முழுதும் 20 ஆயிரம் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி.,) அமைக்கப்பட்டுள்ளன. 'ஆதார்' அட்டையில் திருத்தம் மற்றும் புதிய தகவல்களைச் சேர்க்க இந்த மையங்களைப் பயன்படுத்த, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'ஊரடங்கையொட்டி, மத்திய அரசு,விவசாயிகளுக்கு இந்த நிதியாண்டுக்கான முதல் கட்ட ஊக்கத்தொகையான, 2,000 ரூபாயை முன்கூட்டியே வழங்கியுள்ளது. விவசாயிகளின்'ஆதார்' தகவல்களுடன், நிலம் உள்ளிட்ட ஆவணத் தகவல்கள் முரண்பட்டிருந்தால், இத்தொகை கிடைப்பதில்லை. இதற்கு 'ஆதார்' அட்டையில் திருத்தம் அவசியமாகிறது.
இனி, பொது சேவை மையங்களிலேயே இது சாத்தியமாகும். ஊரடங்கு மட்டுமின்றி, அரசின் சலுகை மற்றும் நிவாரணம் பெற, 'ஆதார்'தான் முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே, கிராமப் புற மக்கள் பலரும், பொது சேவை மையங்களால், பயன்பெறுவர். இன்னும், கூடுதலாக மையங்களை ஏற்படுத்த வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment