Saturday, May 2, 2020


ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை!

2.5.2020

சென்னையில், ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு: சென்னையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு விதிமுறைகளை, பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொது வெளியில், 1 மீட்டர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் வருவோர், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால், கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

கடைகளுக்கு, நிறுவனங்களுக்கு வருவோர் கைகளை சுத்தப்படுத்த, கிருமி நாசினி வழங்க வேண்டும். விதிகளை மீறும், கடைகள், நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்படும்; உரிமம் ரத்து செய்யப்படும். ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024