Saturday, May 2, 2020

அனுமதி சீட்டு: மாநகராட்சிக்கு வர வேண்டாம்

Added : மே 02, 2020 02:03

சென்னை : 'வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் செல்ல, அவசர பயண அனுமதி சீட்டு பெறுவதற்காக, யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநக ராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:முன் கூட்டியே நிச்சயம் செய்த திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, மரணம் ஆகியவற்றில் பங்கேற்க ரத்த தொடர்புடையவர்களுக்கு மட்டும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்ல, அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்படி, அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம், மின்னணு அனுமதி சீட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள், 'http://tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அவசர பயண அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.அனுமதி சீட்டு பெற, மாநகராட்சி அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024