Saturday, May 2, 2020


ஓய்வு பெற்றவர்களுக்கு, 'செக்' வீட்டில் வழங்கிய அதிகாரிகள்

Added : மே 01, 2020 23:29

தஞ்சாவூர் : கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற, போக்குவரத்து ஊழியர்களின் வீடுகளுக்கு, அதிகாரிகள் நேரில் சென்று, பண பலன்களை வழங்கினர்.

அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, கும்பகோணம், கரூர், நாகப்பட்டினம் ஆகிய, ஆறு மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் பணியாற்றிய டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என, 271 பேர், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்றனர்.ஊரடங்கால் இவர்களுக்கான பணி ஓய்வு சான்றிதழையும், சேமநல நிதிக்கான செக்கையும், ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பெற முடியாத சூழல் இருந்தது.

இதையடுத்து, 271 ஊழியர்களின் வீடுகளுக்கும், அந்தந்த கிளை மேலாளர்கள் நேரில் சென்று, பணி ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ், பாராட்டு சான்றிதழ், ஓய்வு கால சேமநல நிதிக்கான, 'செக்' ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024