கம்ப்யூட்டர் இல்லையெனில் அலுவலகம் வர வேண்டும்
Added : ஜூன் 17, 2020 22:33
வீட்டிலிருந்தபடியே பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருந்தால், அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என, லோக்சபா செயலகம், ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்தே, பார்லி., செயலகத்திற்கு, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முழுமையாக வர முடியாத நிலை இருக்கிறது.இதையடுத்து, வீட்டில்இருந்தபடியே பணி செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து அலுவல்களும், இ- - அலுவலகம் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக லோக்சபா செயலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விபரம்:ஒவ்வொரு ஊழியரும், இ- - அலுவலகம் வாயிலாகவே பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், சமர்ப்பிக்கப்பட்ட பணிகளின் அடிப்படையில், ஊழியர்கள் மதிப்பிடப்படுவர்.குறிப்பிட்ட நாளில், ஒரு ஊழியர், எந்தவொரு பணியையும் செய்யவில்லை எனில், அந்த நாளில், அவர், 'ஆப்சென்ட்' என்றோ அல்லது விடுமுறை எடுத்துக் கொண்டார் என்றோ, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்.வீட்டிலிருந்தே பணிகளைச் செய்ய, தேவையான 'கம்ப்யூட்டர், இன்டர்நெட்' வசதிகள் இல்லையென்றால், அந்த ஊழியர்கள், அலுவலகத்திற்கு வர வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
No comments:
Post a Comment